ஒரே படத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன், திலீப் குமார், ரவி தேஜா! | dhanush, sivakarthikeyan, dileep kumar, ravi teja, vajrakaya, தனுஷ், சிவகார்த்திகேயன், ரவி தேஜா, திலீப் குமார்,

வெளியிடப்பட்ட நேரம்: 17:37 (30/01/2015)

கடைசி தொடர்பு:17:37 (30/01/2015)

ஒரே படத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன், திலீப் குமார், ரவி தேஜா!

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வஜ்ரகயா’. இப்படத்தின் படப்பிடிப்புகள் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்பிற்குரிய படமாக உருவாகி வரும் இப்படத்தில் தனுஷ் ஒரு பாடல் பாடியுள்ளார்.

இப்படத்தின் மூலம் தமிழ் , இந்தி என இந்தியா முழுக்க பிரபலம் ஆன தனுஷ் இப்போது கன்னடத்திலும் கால் பதித்துள்ளார். மேலும் படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியில் சிவகார்த்திகேயன், மலையாள முன்னனி நடிகர் திலீப் குமார், தெலுங்கு டாப் ஹீரோ ரவி தேஜா என இவர்கள் மூவரும் சிறப்பு தோற்றத்தில் நடனமாட உள்ளார்.

 

படத்தை ஹர்ஷா இயக்கிவருகிறார். இது மட்டுமல்லாமல் படத்தில் இன்னும் பல மொழி நடிகர்கள் வந்து சர்ப்ரைஸ் கொடுக்க உள்ளதாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.  இந்த பாடல் காட்சி பிரம்மாண்ட ஆஞ்சநேயர் முன்னிலையில் படமாக்கப்பட உள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்