வெளியிடப்பட்ட நேரம்: 17:52 (30/01/2015)

கடைசி தொடர்பு:17:52 (30/01/2015)

ஜீவா, பாபி சிம்ஹா இணையும் அடுத்தப் படம்?

கிருஷ்ணா, ரூபா மஞ்சரி நடிப்பில் வெளிவந்த "யாமிருக்க பயமே" படத்தின் இயக்குநர் டிகே. இவர் அடுத்து ஜீவாவை வைத்து படம் இயக்கவிருக்கிறார். 'யாமிருக்க பயமே' படத்தினை தயாரித்த ஆர்.எஸ்.இன்ஃபோ எண்டர்டெயின்மென்ட்  எல்ரெட் குமார், இந்தப் படத்தினையும் தயாரிக்கிறார். 

பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஜீவா மற்றும் பாபி சிம்ஹா இருவரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இரண்டு கதாப்பாத்திரத்திற்கும் கதையில் மிக முக்கிய ரோல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
 
கதாநாயகிகள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.  விரைவில் படப்பிடிப்பு நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். முழுக்க முழுக்க காமெடி கலந்த த்ரில்லர் மற்றும் ஹாரர் படமாக இருக்கும் என்கிறது இயக்குநரின் நெருங்கிய வட்டாரம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்