திலீப்-மஞ்சுவாரியாருக்கு விவாகரத்து வழங்கியது எர்ணாகுளம் நீதிமன்றம்!

மலையாள நடிகர் திலீப்-மஞ்சுவாரியார் தம்பதிகளுக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான திலீப்பும், நடிகை மஞ்சுவாரியாரும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

இதைத் தொடர்ந்து விவகாரத்து கேட்டு எர்ணாகுளம் குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு கடந்த 6 மாதங்களாக நிலுவையில் இருந்தது.இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை நேற்று வந்தது. இதை விசாரித்த நீதிபதி, இருவரும் சேர்ந்து வாழ விரும்புகிறீர்களா? என கேட்டார். அதற்கு திலீப் மற்றும் மஞ்சுவாரியார் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாகக் கூறினர். இதையடுத்து, நாளை (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி கூறியிருந்தார்.

அதன்படி இன்று மதியம் விசாரணைக்கு வந்தபோது, திலீப்-மஞ்சுவாரியார் தம்பதிகளுக்கு விவாகரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இவர்களின் குழந்தையான மீனாட்சி, திலீப்புடன் இருக்கும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கு மஞ்சுவாரியார் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. திலீப் கூறுகையில், மஞ்சு வாரியார் எப்போது வேண்டுமானாலும் குழந்தை மீனாட்சியை வந்து பார்க்கலாம். அதற்கு நான் தடை விதிக்க மாட்டேன் என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!