‘‘ஸ்ருதிஹாசனை ரோல் மாடலாக ஏற்றுக்கொள்!’’ - மகளுக்கு கௌதமி அட்வைஸ்

உலக நாயகன், நவரச நாயகன்,ஆக்‌ஷன் கிங், சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், என்று எல்லா ஸ்டார்களின் வாரிசுகளும் திரையுலகில் நுழைந்தாயிற்று. பவர் ஸ்டார் தவிர்த்து. அந்த வரிசையில் இப்போது தமிழ்த் திரையுலகிற்கு லேட்டஸ்ட்டாகத் தயாராகி வருகிறார் நடிகை கவுதமியின் மகள் சுப்புலட்சுமி.

நடிப்பு, நடனம் என்று எல்லா கலைகளையும் பயின்று முடித்து இப்போது சினிமாவில் நுழையத் தயாராக இருக்கிறார் சுப்புலட்சுமி. கமலின் இளைய மகள் அக்‌ஷராவும் சுப்புலட்சுமியும் ஒன்றாகவே சாப்பிட்டு, ஒன்றாகவே வளர்ந்த தோழிகள். அக்‌ஷரா இப்போது ‘ஷமிதாப்’ படத்தில் செம பிஸி.

 

படம் வெளிவருவதற்கு முன்பே தினசரி செய்திகளில் அக்‌ஷரா வலம் வருவதைக் கண்ட சுப்புவுக்கும், இப்போதுதான் திரை ஞானம் பிறந்திருக்கிறது. அதன் விளைவாக, ‘‘உனக்கு சினிமாவில் என்ன சந்தேகம் இருந்தாலும், அக்கா ஸ்ருதிஹாசனிடம் கேள். அவளை உன்னுடைய ரோல் மாடலாக ஏற்றுக் கொண்டால், உனக்கு சினிமாவில் வெற்றி நிச்சயம்!’’ என்று மகளுக்கு ஐடியா கொடுத்திருக்கிறார் கௌதமி.

உடன் பிறவா அக்கா ஸ்ருதிஹாசனும், ‘‘உனக்கு நடிப்பதற்குத் தேவையான அழகு, திறமை எல்லாமே இருக்கிறது. பெயரை மட்டும் மாற்றிவிட்டு, சினிமாவில் நுழைந்தால் சினிமாவில் நிச்சயம் ஜெயிப்பாய்!’’ என்று சுப்புவை வாழ்த்தி விட்டாராம்.

விளைவு, ‘‘அக்காதான் இப்போ எனக்கு ரோல் மாடல் கேர்ள்!’’ என்று பல நிகழ்ச்சிகளில் எல்லோர் கண்களிலும் பட ஆரம்பித்திருக்கிறார் ஸ்வீட் சிக்ஸ்ட்டீன் சுப்பு.

தயாரிப்பாளர்களே... சீக்கிரம் புக் பண்ணுங்கப்பா!
- தமிழ் -

Do you like the story?

Please Appreciate the Author by clapping!