சூர்யா ,அமலா நடிக்கும் புதிய படம்? | சூர்யா, அமலா பால், பாண்டிராஜ், surya, amala, paul, pandi raj,

வெளியிடப்பட்ட நேரம்: 10:43 (04/02/2015)

கடைசி தொடர்பு:10:43 (04/02/2015)

சூர்யா ,அமலா நடிக்கும் புதிய படம்?

பாண்டிராஜ் இயக்கத்தில் விரைவில் குழந்தைகளை மையமாக வைத்து உருவாக்க உள்ள புதிய படத்திற்கு ஏற்கனவே ஜோதிகா நடிக்கலாம் என அரசல் புரலாக கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் அமலா பால் நடிக்க உள்ளார். 

சமுத்திரகனி படத்தின் பள்ளி மாணவி, மலையாளத்தில் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் ‘மிலி’ என அமலா பால் திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் அவருக்கான சிறந்த இடத்தை இன்னும் தக்க வைத்துள்ளார். 

இப்போது அடுத்தகட்டமாக பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் சூர்யா அமலா பால் நடிக்க உள்ளனர். இந்த படம் முழுக்க முழுக்க ‘பசங்க’ பாணியில் குழந்தகளை மையமாக வைத்து உருவாக உள்ள படம். சூர்யா , அமலா கணவன் மனைவியாக நடிக்க உள்ள இப்படத்தில் அமலா ரோலில் நடிக்க முதலில் மலையாள நடிகை மஞ்சு வாரியரிடம் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close