வாலு மீண்டும் ரிலீஸ் தேதி மாற்றம்!

சிம்பு - ஹன்சிகா நடிப்பில் பல வருடங்களாக வெளிவர காத்திருக்கும் திரைப்படம் வாலு. இப்படத்தினை விஜய் சந்தர் இயக்க தமன் இசையமைப்பில் நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் சக்கரவர்த்தி இப்படத்தினை தயாரித்துள்ளார்.

‘வாலு’ 2012ல் படம் தொடங்கப்பட்ட நாள் முதலே தீபாவளி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டு தீபாவளி கடந்தும் படம் மட்டும் வந்தபாடில்லை. படம் ட்ராப்பாகும் வாய்ப்பு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

படம் வெளிவராததற்கு பல்வேறு காரணங்களும் பல தடைகளும் ஏற்பட்டன என்று பல அறிக்கைகள் வெளியிட்டது ‘வாலு’ டீம். இறுதியில் படமும் முடிந்து வெளியிடுவதற்காக காத்திருக்கின்றது. தள்ளிக் கொண்டே சென்ற 'வாலு' படம் நேற்று (பிப்ரவரி 3) சிம்புவின் பிறந்த நாளுக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. இறுதியில் சிம்புவின் பிறந்தாளுக்காக ‘வாலு’ பாடல் டீஸர் மட்டும் முன் தினம் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் இம்மாத கடைசியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இறுதியில் ‘வாலு’ ரிலீஸ் தேதி சில நாட்கள் தள்ளப்பட்டு படம் மார்ச் 27ல் வெளியாகும் என்று படத்தின் இயக்குநர் விஜய் சந்தர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமான தெரிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் தினமும் டிரெண்ட் செட்டில் இருக்கும் அஜித் நடிக்கும் “என்னை அறிந்தால்” படம் வெளியாகவிருப்பதால் படம் தள்ளி வைத்திருக்கலாம் எனவும் இம்மாதம் ஏற்கனவே தனுஷின் ‘

Do you like the story?

Please Appreciate the Author by clapping!