இந்தியில் பெருந்தொகைக்கு விலைபோன அஞ்சலி படம்! | anjali, geethanjali, telugu, அஞ்சலி, கீதாஞ்சலி

வெளியிடப்பட்ட நேரம்: 16:32 (04/02/2015)

கடைசி தொடர்பு:16:32 (04/02/2015)

இந்தியில் பெருந்தொகைக்கு விலைபோன அஞ்சலி படம்!

தெலுங்கில் ராஜ் கிரண் இயக்கத்தில் அஞ்சலி, ஸ்ரீனிவாச ரெட்டி நடிப்பில் ஆகஸ்ட் 8ம் தேதி தெலுங்கில் வெளியான படம் ‘கீதாஞ்சலி’. காமெடி ஹாரர் படமான இந்த படம் தெலுங்கில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படம் மெகா ஹிட்டானது. 

ஏற்கனவே ‘சீதம்மா வகிட்டுலு ஸ்ரீமல்லி செட்டு’, ’மசாலா’ போன்ற படங்களில் நடித்த அஞ்சலி இப்படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாகியுள்ளார். தற்போது இப்படத்தின் இந்தி ரீமேக் நீ நான் என போட்டி போட்டு விற்பனையாகியுள்ளது. 

இந்தியில் பிரபல நிறுவனம் ஒன்று பெரும் தொகை கொடுத்து இப்படத்தை வாங்கியுள்ளது. அஞ்சலி கேரக்டரில் ஸ்வாதி நடிக்க உள்ளார். மேலும் மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close