ஒரு காட்சியில் கூட ஆண்களே நடிக்காமல் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் ! | இனிவரும் நாட்கள், இனியா, ஆர்த்தி, Eni varum natkal, iniya, arthia

வெளியிடப்பட்ட நேரம்: 12:54 (06/02/2015)

கடைசி தொடர்பு:12:54 (06/02/2015)

ஒரு காட்சியில் கூட ஆண்களே நடிக்காமல் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் !

ஹீரோவை வைத்தே எல்லாப் படங்களும் நகரும் தமிழ் சினிமாவில், ‘சிநேகிதியே’ படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க பெண்களை வைத்தே படம் தயாராகி வருகிறது. மலையாளத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்கள் இயக்கிய இயக்குநர் துளசிதாஸ் தமிழில் இயக்கும் படம் “ இனி வரும் நாட்கள்”

இனியா, ஆர்த்தி, சுபிக்சா, ஈடன், அர்ச்சனா போன்ற கதாநாயகிகள் மட்டுமே நடிக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் நதியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு காட்சியில் கூட ஆண்கள் நடிக்கவில்லை என்பது கூடுதல் சிறப்பு.

கல்லூரி மாணவிகளாக நடிக்கும் கதாநாயகிகள் டாக்குமெண்ட்ரி எடுக்க பயணம் போகிறார்கள். அப்போது நடக்கும் எதிர்பாராத சம்பவங்களும், தொடர்ந்து நடக்கும் சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் திரைக்கதையாக படம் அமைத்திருக்கிறார் இயக்குநர். பாட்டு, சண்டை மற்றும் காமெடி என்று பக்கா பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.

படத்தில் ஹீரோவே இல்லையா என்று கேட்டதற்கு, “ பெண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் குடுத்து எடுக்கப்படும் படம், முழுவதும் பெண்களாக இருப்பதால் அவர்களின் திறமையைக் காட்டுவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். படத்தில் கதாநாயகிகள் இருக்கிறார்கள், கதாநாயகன் படத்தின் திரைக்கதையே” என்று கூறினார் இயக்குநர் துளசிதாஸ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close