வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (07/02/2015)

கடைசி தொடர்பு:11:40 (07/02/2015)

ஜெய்க்கு ஜோடியாக நடிக்கும் த்ரிஷா!

'ஜோடி' படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து 'மெளனம் பேசியதே' படத்தினால் கதாநாயகியாக அறிமுகமானவர் த்ரிஷா. 15 வருட சினிமாவில் ஒவ்வொரு பட வெற்றிக்கும் காரணம் அவரின் சிறப்பான நடிப்பு. பட வாழ்க்கை மற்றும் மணவாழ்க்கை இரண்டிலும் சமவிகிதத்தில் முக்கியத்துவம் தரும் நடிகை த்ரிஷா.

தற்போது 'த்ரிஷா - வருண்மணியன்' நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது, திருமணத்திற்குப் பின்பு த்ரிஷா நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்களுக்கு இருக்கத் தான் செய்கிறது. தற்போது வருண்மணியன் தயாரிப்பில், இயக்குநர் திரு படத்தில் த்ரிஷா நடிக்கவிருக்கிறார். ஜெய் மற்றும் த்ரிஷா நடிப்பில் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்கவிருக்கிறது.

கும்பகோணம் பெண்ணாக நடிக்கவிருக்கிறார் த்ரிஷா. ஜெய் மற்றும் த்ரிஷா இருவருக்கும் சமமான கதாப்பாத்திரம் இருப்பதாகவும் இவகள் இருவரின் பாத்திரமும் கதையை பலப்படுத்தும் என்கிறது படக்குழு. 

இயக்குநர் திரு இயக்கத்தில் ’சமர்’ படத்தில் நடித்த த்ரிஷாவுக்கு இது அவருடன் இரண்டாவது படம். மேலும் ’தீராதவிளையாட்டுப் பிள்ளை’, ’சமர்’ மற்றும் ’நான் சிகப்பு மனிதன்’ படங்களைத் தொடர்ந்து பெயரிடப்படாத இந்தப் படம் திருவுக்கு நான்காவது படம்.

தமன் இசையமைக்க, ரிச்சர்ட் எம். நாதன் கேமிராவில் ரூபன் எடிட்டிங் செய்ய விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகவிருக்கிறது. சென்னை மற்றும் கும்பகோணம் பகுதிகளில் படபிடிப்பு நடைபெற உள்ளது.

இந்தப் படம் மட்டுமில்லாமல் த்ரிஷா  ’போகி’ உள்ளிட்ட நான்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடதக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்