ரஜினிக்கு மறுப்பு; 'இசை'க்கு ஒகே: இவர் கேரக்டரைப் புரிஞ்சுக்கவே முடியலியே!

மிழ் சினிமாவில் கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் கும்பல் கதாபாத்திரங்களில் ஒருவராக 50 படங்களுக்கும் மேலாக நடித்தவர்தான் சத்யராஜ்.

'தங்கைக்கோர் கீதம்', 'நான் சிகப்பு மனிதன்' போன்ற வெள்ளிவிழா படங்களிலும் இவரின் பங்கு உண்டு. ஆனால் டைட்டில் கார்டில் சத்யராஜ் என்ற பெயர் பத்தோடு பதினொன்றாக... மன்னிக்கவும் நூறோடு நூத்தியொன்றாகத்தான் தென்படும். 'நூறாவது நாள்' என்ற படத்தில் மொட்டை அடித்த டார்ச்சர் வில்லனாக இவரை அடையாளம் கண்டபின்புதான் தமிழ் சினிமா உலகம் இவரை உற்று கவனிக்க ஆரம்பித்தது.

பின்பான திரையுலகப் பயணங்களில் உச்ச நட்சத்திரங்களான கமல் மற்றும் ரஜினிகாந்த் படங்களின் மெயின் வில்லனாய் ஆனார். 'காக்கிச் சட்டை'யின் தகடு தகடு, 'மிஸ்டர் பாரத்'தின் என்னம்மா கண்ணு செளக்கியமா என்று ஹீரோக்களைய ஓரம் கட்டினார்.

வில்லனாக அசத்திக் கொண்டிருந்தவருக்கு சின்னப்பதாஸ் கேரக்டர் தந்து, முட்டம் கடற்கரையில் காதல் தோல்வியில் பாட்டு பாடவைத்து, பாறையில் பூ முளைக்க வைத்த பெருமை இயக்குநர் பாரதிராஜாவையே சாரும். இந்த 'கடலோரக் கவிதைகள்' வில்லனை மறக்கடித்தது.

அதன்பின்னான நாட்களில், தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகனாக கேரன்ட்டி ஹீரோவாக வலம் வந்தது நிறையப் படங்கள். கவுண்டமணியுடனான இவரின் காம்பினேஷன் படங்கள் எவர்கிரீன் ஹிட்ஸ். 'நடிகன்', 'மாமன் மகள்' என்று இன்றும் சிரித்துக்கொண்டிருக்கலாம் படம் பார்த்து.

சத்யராஜ் எப்போதும் தன் இமேஜ் குறித்து கவலைப்பட்டது கிடையாது. மரத்தைச் சுற்றி  டூயட் பாடிக்கொண்டிருந்த அதே நேரத்தில்தான் 'பூவிழி வாசலிலே' போன்ற மனைவியை இழந்த குடிகாரன் கேரக்டரில் நடித்தார். கதாநாயகனாகவும், வில்லனாகவும் பிரமாதப்படுத்திய 'அமைதிப்படை' தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட் ஆனது.

ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்கள் என்று எல்லாவற்றிலும் தன் முத்திரையை பதித்த சத்யராஜ் சிறிய இடைவெளிக்குப்பின் கிளாப்ஸ் வில்லனாக தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் 'இசை' படத்தில் நடித்து அப்ளாஸை அள்ளியுள்ளார். .

சைக்கோத்தனமான அவரின் கதாபாத்திரம் பேசும் ஒவ்வொரு வசனத்துக்கும் தியேட்டரில் கைதட்டல். இன்ன கதாபாத்திரம்தான் செய்வேன் என்றெல்லாம் பிடிவாதம் பிடிக்காமல் தன் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தை ஏற்று அதிலும் தன் ஸ்கோர் உயரும்படி பார்த்துக்கொள்வார்.

அதே சமயம் ரஜினி நடித்த சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்க கேட்டபோட்ர்ஹமறுத்து விட்டவர். சத்யராஜின்  கேரக்டரை என்றுமே புரிந்துகொள்ள முடியலேயே..?!

- கணேசகுமாரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!