வெளியிடப்பட்ட நேரம்: 15:23 (07/02/2015)

கடைசி தொடர்பு:15:23 (07/02/2015)

’என்னை அறிந்தால்’ முதல் நாள் வசூல் விபரம்!

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், அருண்விஜய் நடிப்பில் ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘என்னை அறிந்தால்’. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பொய்யாக்காமல் விருந்து படைத்திருக்கிறது படம். படத்தின் ஓப்பனிங் தமிழ்நாடு, மட்டுமில்லாமல் கேரளாவிலும் படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ்.

படம் வெளியான முதல் நாள் (பிப்ரவரி 5) மட்டும் தமிழ்நாட்டில் 8.35கோடி வாசூல் சாதனைப் படைத்திருக்கிறது. கேரளாவில் 1.65 கோடி வசூலித்திருக்கிறது.

அமெரிக்காவிலும் படத்துக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்திருப்பதாக விநியோகஸ்தர் அட்மஸ் கூறியுள்ளார். 75 திரைகளில் படம் திரையிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அமெரிக்காவில் முதல் நாள் மட்டும் ஒரு லட்சத்து 13 ஆயிரம் டாலர் வசூல் வேட்டை செய்திருக்கிறது ’என்னை அறிந்தால்’. இது அஜித் படங்களில் ரெக்கார் ப்ரேக் எனவும் சொல்லப்படுகிறது 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்