கணேஷ் வெங்கட்ராமனுக்கு விரைவில் திருமணம்!

மன்மத வருடம் தொடங்கியதும் சரி, காதல் திருமணங்கள் கூடிக்கொண்டே போகின்றன. அடுத்து ஒரு காதல் திருமணம் நடைபெறவிருக்கிறது. ‘அபியும் நானும்’ படத்தின் மூலம் அறிமுக நாயகனாக தமிழ் சினிமாவிற்குள் வந்தவர் கணேஷ் வெங்கட்ராமன்.

அடுத்தடுத்து ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘தீயா வேலை செய்யனும் குமாரு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரும் டி.வி. நடிகை நிஷாவும் காதலித்து வருவதாக பேசப்பட்டது. நிஷா ‘மகாபாரதம்’ மற்றும் பல டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருக்கிறார். இப்போது இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நிஷாவின் உறவினர் வீட்டில் நடைபெற்றது.

திருமணம் இந்த வருட இறுதிக்குள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். இதைப் பற்றி வெங்கட்ராமன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ ஒரு இனிய செய்தியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இறுதியில் என்னுடைய கனவு காதலியை கண்டுபிடித்துவிட்டேன். நிஷா. இருவீட்டார்களும் பேசவிருக்கிறார்கள் விரைவில் திருமணம் நடக்கும். உங்களது ஆசிகள் மற்றும் அன்பு மட்டும் போதும்” என்று ட்வீட் செய்துள்ளார் கணேஷ் வெங்கட்ராமன்.

கணேஷ் வெங்கட் ராமன் தற்போது ‘அச்சாரம்’மற்றும் ‘தனி ஒருவன்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!