வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (09/02/2015)

கடைசி தொடர்பு:14:40 (09/02/2015)

நித்யானந்தாவின் வாழ்க்கை வரலாறு - படக்குழுவுக்கு கொலை மிரட்டல்!

சினிமாவில் பிரபலங்களின் நிஜவாழ்க்கையில் நடக்கும் உண்மைச் சம்பவங்களை படமாக்குவது சமீபத்தில் அதிகமாகியிருக்கிறது. நித்யானந்தாவைப் போன்ற சாமியாரின் வாழ்க்கை குறித்த படம் கன்னடா, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

கன்னடாவில் ‘யாவரினு’ என்றப் பெயரில் எடுக்கப்பட்ட இப்படம், தமிழில் “சொர்க்கம் என் கையில்” என்ற பெயரில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்படிருக்கின்றன. ஆனால் படம் வெளியிடுவதற்க்கு முயற்சி செய்துவருபவர்களை நித்தியானந்தாவின் ஆட்கள் மிரட்டுவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

படம் வெளியிடுவதற்கான செயல்பாடுகளை அவர்கள் தடுத்து நிறுத்துவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் படக்குழு படத்தினை வெளியிடுவதற்கான முழு முயற்சியில் இறங்கியுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க