ஓகே கண்மனி தலைப்பு மாறுமா? | OK KANMANI, maniratnam, ஒகே கண்மனி, மணிரத்னம், துல்கர் சல்மான், நித்யா மேனன்

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (10/02/2015)

கடைசி தொடர்பு:12:20 (10/02/2015)

ஓகே கண்மனி தலைப்பு மாறுமா?

'கடல்' படத்திற்கு அடுத்து மணிரத்னம் இயக்கிவரும் படம் 'ஓகே கண்மனி'. இப்படத்தில் 'வாயை மூடி பேசவும்' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் ஜோடியாக நடிக்கிறார்கள். துல்கர், நித்யாமேனனும் துல்கரும் மலையாளத்தில் ஏற்கனவே ‘உஸ்தாத் ஹோட்டல்’ மற்றும் ‘பெங்களூரு டேய்ஸ்’ என இரு படங்களும் மெகா ஹிட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

’அலைப்பாயுதே’ படத்திற்குப் பிறகு காதலும் காதல் சார்ந்த படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் தலைப்பு மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'ஓகே கண்மனி' படத்தில் ஆங்கில வார்த்தை கலந்திருப்பதால் அதை மாற்றி 'ஓ காதல் கண்மனி' என்று வைக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடக்கின்றனவாம்.

முந்தைய தலைப்பு குறித்தோ, 'ஓ காதல் கண்மனி' என்ற தலைப்பு குறித்தோ இயக்குநர் பக்கத்திலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. என்றாலும் இந்த பெயர் கூகுள் விக்கிப்பிடியாவில் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

முழு ரொமான்டிக் படமாக வரவிருக்கும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ், கனிகா, சுப்ரமணியன் ரம்யா உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் விரைவில் படத்தின் டீஸர் மற்றும் இசை ரிலீஸ் குறித்த செய்திகள் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்