ஜூலையில் “புலி” ?

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படம் “புலி” தென்னிந்தியாவின் டாப் நடிகைகளான ஸ்ருதிஹாசன் மற்றும் ஹன்சிகா நாயகிகளாகவும், ஸ்ரீதேவி, தம்பிராமையா, சுதீப் உள்ளிட்ட பலர் நடிப்பில் 100 கோடி பட்ஜெட்டில் “புலி” படம் உருவாகி வருகிறது.

விஜய் மற்றும் தம்பிராமையாவிற்கான முக்கிய சீன்கள் எடுத்துமுடிக்கப்பட்டுவிட்டன. புலி படக்குழுவினர் அடுத்ததாக கேரளாவில் படப்பிடிப்பிற்கு செல்லவிருக்கின்றனராம். பிப்ரவரி 21 முதல் ஆரம்பமாகும் படப்பிடிப்பு 15 நாள் முதல் 20 நாட்கள் வரை நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளா, தலக்கோணம் என்று படபிடிப்பில் பிஸியாக இருக்கும் ’புலி’ படப்பிடிப்பு விரைவில் முடியும் என்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் எடிட்டிங் அடுத்தடுத்து நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாடல்கள் மே மாதத்திலும், ஜுலையில் படம் வெளிவரலாம் என்றும் சினிமா வட்டாரம் தெரிவித்துள்ளது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!