சிம்பு , செல்வராகவன் கூட்டணியில் புதிய படம் - தனுஷ் வாழ்த்து!

தனுஷ் மற்றும் சிம்பு இருவரும் தஙக்ளுடைய ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு ட்வீட் செய்தனர். இது வைரலாக பரவிவருகிறது. தனுஷ் தன் ட்வீட்டில் என் அண்ணன் செல்வராகவனும் தம்பி சிம்புவும் இணைகிறார்கள்.கண்டிப்பாக இது சிறப்பான விஷயம். ரெடியாக இருங்கள் சிம்பு சிறந்த பாடத்திற்கு என குறிப்பிட்டிருந்தார். அண்ணனை செல்வராகவன் என்றும் சிம்புவை தம்பி எனவும் தனுஷ் கூற வைரலோ வைரலாகியுள்ளது.  

சிம்பு நடிப்பில் “வாலு” படம் வரும் மார்ச் 27ல் வெளிவரவிருக்கிறது. அதைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் “இது நம்ம ஆளு” படமும், 'என்னை அறிந்தால்' படத்திற்குப் பிறகு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஆரம்பித்து அஜித் படம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது

இப்போது இந்த படத்திற்கு பிறகு  செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார். ’இரண்டாம் உலகம்’ படத்திற்குப் பிறகு சிம்புவை வைத்து படம் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. பின்னர் செல்வராகவன் திரைக்கதை அமைக்கும் பணியில் இருந்தார்.

 படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. தனுஷின் ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ள  சிம்பு , ’நன்றி கூறியதோடு ‘சூப்பர் எக்சைட்டட், த்ரில்லிங் கூட்டணி செல்வா, யுவன் எஸ்.டி.ஆர்’ என ட்வீட் செய்துள்ளார். 

இதே போல் செல்வராகவனும் ’எனது அடுத்த படத்தை சிம்புவுடன் எடுக்க இருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி’, மேலும் இந்த படம் உங்களை கண்டிப்பாக கவரும் என ட்வீட் செய்துள்ளார்’.

இவர்களது ட்வீட்டுகளை பார்த்து ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பு கொடுத்து ஷேர் செய்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் படத்திற்கு தயாரிப்பு தனுஷாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தனுஷ், செல்வா, யுவன் கூட்டணியில் புதிய படம் அறிவிப்பு விரைவில் என தனுஷ் ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!