‘கதவைத் திற, காசு வரட்டும்!’ - நித்தியின் புத்தியை சீண்டிய சீடர்கள்!

நித்தி - ரஞ்சி  விஷயம் பழைய கஞ்சியாகிவிட்டது என்று ஓய்ந்திருந்த வேளையில், மீண்டும் அதை சூடாகப் பொங்க வைத்திருக்கிறார்கள் - ஒரு டப்பிங் திரைப்படத்தின் மூலம். நித்தியானந்தா - ரஞ்சிதா லீலைகளை மையமாக வைத்து ‘யாரிவனு’ என்று ஒரு கன்னடப் படத்தைத் தயாரித்திருந்தார், கன்னடத் தயாரிப்பாளர் மதன் பட்டேல். ‘யாரிவனு’ பட ரிலீஸின்போதே, நித்தியின் ஆதாரவாளர்களிடம் இருந்து இதற்குப் பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அதையும் மீறி, பாக்ஸ் ஆபீஸை லேசாக உரசி வெற்றி பெற்றது ‘யாரிவனு!’கன்னடம் மட்டுமில்லை; தமிழ் கூறும் நல்லுலகத்திற்கும் இதைக் கூற வேண்டும் என்று முடிவெடுத்த மதன் பட்டேல், தமிழிலும் இதை ரிலீஸ் செய்யத் தயாராகி விட்டார். ‘சொர்க்கம் என் கையில்’ என்ற பெயரில் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் இந்தப் படத்திற்கு  இசை, தயாரிப்பு, இயக்கம் எல்லாமே மதன் பட்டேல்தான். இதைக் கேள்விப்பட்ட நித்தியானந்தாவின் தமிழ் சீடர்கள் வழக்கம்போல், ‘‘நீ நாசமாப் போயிடுவே; உன் அழிவு எங்கள் கையில்தான்!’’ என்று மதனை மிரட்ட ஆரம்பித்திருக்கிறார்களாம். இது வரை 200-க்கும் மேற்பட்ட மிரட்டல் போன்கள் வந்து குவிந்து விட்டனவாம். 


‘‘இதை நான் சும்மா விடப் போவதில்லை. படம் எடுப்பது ஒரு தனி நபரின் உரிமை சம்பந்தப்பட்ட விஷயம். என்னை போனில் மிரட்டியவர்களின் குரலை நான் ரெக்கார்டு செய்திருக்கிறேன். விரைவில் தக்க ஆதாரங்களுடன் கமிஷனர் அலுவலகத்தில் கம்ப்ளெய்ண்ட் செய்வேன்! பிரச்னையைப் பெரிதாக்கினால், படத்தின் தலைப்பை ‘நித்தியானந்தா’ என்றே வைக்க வேண்டி வரும்!’’ என்று நித்தியின் சீடர்களுக்குப் பதில் மிரட்டல் விடுத்திருக்கிறாராம் மதன். இப்போதைக்கு டிஜிபி-யிடம் சொல்லி, பாதுகாப்பு வளையத்துக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்.

இதைவிடக் கொடுமை, ‘கதவைத் திற காசு வரட்டும்’ எனும் பாணியில் சில ஐடியா அய்யாச்சாமிகள், ‘‘போராடுறதை விட்டுட்டு, பேசாம படத்தோட சில ஏரியா ரைட்ஸை வாங்கி துட்டு பாருங்க சாமீ!’’ என்று நித்தியின் புத்தியைச் சீண்டுகிறார்களாம்.

- தமிழ்-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!