வசந்த மாளிகை' பட தயாரிப்பாளர் ராமாநாயுடு மரணம்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'வசந்த மாளிகை' படத்தை தயாரித்த ராமாநாயுடு இன்று காலமானார்.

78 வயதான ராமாநாயுடு, தெலுங்குத் திரையுலகில் புகழ் பெற்று விளங்கியவர். தமிழில் சிவாஜி கணேசன் நடித்த வசந்த மாளிகை, ரஜினிகாந்த் நடித்த தனிக்காட்டு ராஜா, மதுரகீதம், குழந்தைக்காக, தெய்வபிறவி, திருமாங்கல்யம் உள்ளிட்ட உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.

ராமாநாயுடுவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவருக்கு வெங்கடேஷ்பாபு, சுரேஷ்பாபு என இருமகன்கள் உள்ளனர். தெலுங்கு சினிமாவின் முக்கிய நாயகனாகத் திகழ்கிறார் வெங்கடேஷ். சுரேஷ்பாபுவின் மகன் தான் தெலுங்கு நடிகர் ராணா. ராமாநாயுடுவின் மகள் லட்சுமிதான் பிரபல நடிகர் நாகார்ஜுனின் முதல் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

எம்பியாக பதவி வகித்துள்ள ராமாநாயுடு, தாதா சாகேப் பால்கே உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!