தமிழில் ரீமேக்காகிறது ’ஷட்டர்’! | ஷட்டர், சத்யராஜ், விஜய், அந்தோணி, shutter, sathyaraj, vijay, anthony, tamil remake

வெளியிடப்பட்ட நேரம்: 11:27 (19/02/2015)

கடைசி தொடர்பு:11:27 (19/02/2015)

தமிழில் ரீமேக்காகிறது ’ஷட்டர்’!

மலையாளத்தில் வெளியாகி மெகா ஹிட்டடித்த படம் ‘ ஷட்டர்’. அதிகம் பாராட்டப்பட்ட டிரெண்ட் செட் படமென்றும் கூறலாம். இந்த படம் துபாய் சர்வதேச திரைப்பட விழாவில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்யும் திடத்தில் இருக்கின்றனர். தமிழி சினிமாவின் பிரபல எடிட்டர் ஆந்தோணி இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். படத்தை இயக்குநர் விஜய் தயாரிக்க உள்ளதுதான் சுவாரஸ்யமான ஒன்று. விஜய்யும், அந்தோணியும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மலையாளத்தில் அதிகம் பேசப்பட்ட லால் கேரகடரை தமிழில் சத்யராஜ் நடிக்க உள்ளார். அனு மோல் நாயகியாக நடிக்க இருக்கிறார். படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படம் த்ரில்லர் கதை என்பதால் எடிட்டரே இயக்க இருப்பதால் படத்தின் வேகமும், த்ரில்லரும் குறையாமல் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்