’பெங்களூர் டேஸ்’ ஆர்யா, பாபி சிம்ஹா நடிப்பில் இப்போ சிங்கப்பூர் டேஸ்? | பெங்களூர் டேஸ், ஆரியா, பாபிசிம்ஹா, arya, bobby simha, bangalore days, naszirya, fahad fazil, dulquar salman

வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (21/02/2015)

கடைசி தொடர்பு:13:05 (21/02/2015)

’பெங்களூர் டேஸ்’ ஆர்யா, பாபி சிம்ஹா நடிப்பில் இப்போ சிங்கப்பூர் டேஸ்?

மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்த “பெங்களூர் டேஸ்” தமிழ் ரீமேக்கில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் யார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

துல்கர் சல்மான், ஃபகத் ஃபாசில், நித்யா மேனன், நஸ்ரியா, நிவின் பவுலி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியான படம் “பெங்களூர் டேஸ்” இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கை “ பொம்மரீலு பாஸ்கர் இயக்கவிருக்கிறார். அதற்கான நடிகர், நடிகைகள் யார் என்பது நீண்ட நாளாகவே குழப்பத்தில் இருந்து வந்தது.

முதலில் சமந்தா, சித்தார்த் நடிப்பதாக இருந்தது. அவர்களின் காதல் பிரச்னையால் இவர்கள் நடிக்கவில்லை என்ற செய்தி வெளியாகியது.  

இறுதியில் துல்கர் சல்மான், நஸ்ரியா, நிவின் பவுலி போன்றவர்களின் கேரக்டர்களில் முறையே ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா நடிக்க விருக்கின்றனர். மேலும் ஃபகத் ஃபாசில் வேடத்தில் ராணா நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யவிருக்கின்றது.

சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், பெங்களூரை மையமாக வைத்து மலையாளத்தில் படத்தின் கதை நகரும். அதை மாற்றி சிங்கப்பூரில் நடப்பது போன்று படத்தின் கதையை மாற்றவிருப்பதாகவும், படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பார் எனவும் இயக்குநர் பொம்மரீலு பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்