பவன் கல்யாண் அடுத்தப் படம்? | pavan kalyan, பவன் கல்யாண், கப்பர் சிங்

வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (24/02/2015)

கடைசி தொடர்பு:12:35 (24/02/2015)

பவன் கல்யாண் அடுத்தப் படம்?

இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் பவன்கல்யாண் மற்றும் வெங்கடேஷ் நடிப்பில்‘கோபாலா கோபாலா’ படம் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது. தெலுங்கின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் அடுத்தப்படத்தினை இயக்குநர் தசாரி நாராயண ராவ் இயக்கவிருக்கிறார்.

தெலுங்கு சினிமா உலகின் முடிசூடா மன்னனாக வலம் வருபவர் தசாரி நாயாரண ராவ். இவர் 150க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர், 250 படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராகவும் பல பரிமாணங்களை சினிமாவில் செயல்பட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் இரண்டு தேசிய விருதினையும், ஒன்பது தெலுங்கு மாநில விருதினையும் பெற்ற சிறந்த இயக்குநர் இவர்.

தசாரி நாராயண ராவ் தன்னுடைய இணைய பக்கத்தில், “ நான் இயக்கும் அடுத்தப் படத்தில் பவர் ஸ்டார் பவண்கல்யாண் நடிக்க விருக்கிறார். நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்” என்று இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

2012ல் வெளியாகி மெகா ஹிட் அடித்த ’கப்பர் சிங்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்பொழுது பவண் நடித்து வருகிறார் என்பது கூடுதல் செய்தி. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்