வெளியிடப்பட்ட நேரம்: 10:13 (26/02/2015)

கடைசி தொடர்பு:10:13 (26/02/2015)

சிரஞ்சீவியின் 150வது படம்?

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்ததில் இருந்து சினிமாவை தள்ளிவைத்துவிட்டார். எனினும் அவரை திரையில் காண இன்னமும் ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். மேலும் அவருக்கு அடுத்த படம் 150வது படம் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் 150வது படத்தை பூரி ஜெகன்நாதன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நான் சிரஞ்சீவியின் தீவிர ரசிகன், அவரை வைத்து படம் இயக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். மேலும் அவர் படத்திற்கு ‘ஆட்டோ ஜானி’ என்ற பெயரை பதிந்து வைத்துள்ளேன். என கூறியுள்ளார் பூரி ஜெகன்நாதன்.

பூரி ஜெகன்நாதனிடம் சிரஞ்சீவியும் கதை கேட்டு ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. எனினும் அரசியல் பிரமுகராகவும் இருப்பதால் படங்களில் முன்பு போல் மாஸ் விஷயங்களை பயன்படுத்த இயலாது என்பதால் அதற்கேற்றார் போல் கதை சற்று மாற்ற சொல்லியுள்ளார் என கூறப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்