வெளியிடப்பட்ட நேரம்: 17:06 (27/02/2015)

கடைசி தொடர்பு:17:06 (27/02/2015)

“வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” மலையாள ரீமேக்!

தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த படம் “மரியாதை ராமன்னா”. இப்படத்தை ராஜமெளலி இயக்கியிருந்தார். இவர் ”நான் ஈ”, “மாகதீரா” போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர். “மரியாதை ராமண்ணா” படம்தான் தமிழில் சந்தானம் நடிப்பில் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தற்பொழுது மலையாளத்திலும் இப்படம் ரிமேக் செய்யப்பட்டுள்ளது.

மலையாளத்தில் “இவன் மரியாதை ராமன்” என்ற பெயரில் உருவாகியிருக்கும் இப்படத்தில்  திலிப் மற்றும் நிக்கி கல்ராணி  ஹீரோ ஹீரோயின்களா நடிக்கிறார்கள். இப்படத்தில் வரும் சைக்கிள் பேசுவது போன்ற காட்சிகளுக்கு நடிகர் சுராஜ் டப்பிங் பேசியுள்ளார்.

இப்படத்தை சுரேஷ் திவாகர் இயக்கியிருக்கிறார். கோபி சுந்தர் இசையமைக்க, விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை ஜோசப் ஃபிலிம் கம்பெனி தயாரிக்கிறது. மார்ச் 5ல் டிரெய்லர் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்