விற்பனைக்கு வருகிறது அனுஷ்காவின் நகைகள்!

19ம் நூற்றாண்டைச் சேர்ந்த ருத்ரமாதேவி அரசியாரின் கதைதான் அவரின் பெயரிலேயே படமாக உருவாகி வருகிறது. குணசேகர் மாபெரும் பொருட்செலவில் இயக்கி வருகிறார். இதில் அனுஷ்கா வீரம் கொண்ட அரசியாக நடித்துள்ளார்.

படத்திற்கு ஒவ்வொரு செட்டுகளும் மாபெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. தோட்டாதரணி இந்த படத்திற்காக அரண்மனை, தர்பார், பிரம்மாண்டமான கோவில், மாபெரும் கடைவீதி, குளம் என 16-க்கும் மேலான அரங்கங்களை அமைத்து கொடுத்துள்ளார்.

ஒரிசாவில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் இப்படத்திற்காக எடுக்கப்பட்ட போர்க்களக் காட்சியில் ஆயிரத்திற்கும் அதிகமான துணை நடிகர்கள் பங்குகொள்ள பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.

அஞுஷ்காவிற்காக சென்னையில் உள்ள என்.ஏ.சி. தங்க மாளிகையில் ஐந்து கோடி ரூபாய் செலவில் தங்க ஆபரணங்கள் கலை நுணுக்கத்தோடு செய்யப்பட்டு இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த ’ருத்ரமாதேவி’ அனுஷ்கா பயன்படுத்திய நகைகள் என்.ஏ.சி., தங்க மாளிகையில் விற்பனைக்கும் வரவிருக்கிறது.இதன் மதிப்பு மட்டும் 5 கோடி ரூபாய். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!