தமிழில் மீண்டும் மம்மூட்டி ,திலீப்! | திலீப், மம்மூட்டி, மலையாளம் ஹீரோ, baskar the rascal, dileep

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (02/03/2015)

கடைசி தொடர்பு:17:20 (02/03/2015)

தமிழில் மீண்டும் மம்மூட்டி ,திலீப்!

மணிரத்னம் இயக்கத்தில்  துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் டீஸர், டிரெய்லர் என இணையத்தில் ஹிட்டடித்து வருகிறது . இந்நிலையில் மம்மூட்டி மீண்டும் ஒரு தமிழ் படம் மூலம் ரீஎண்ட்ரி ஆக உள்ளார். 

இயக்குநர் ராம் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க உள்ள மம்மூட்டி தற்போது மலையாளத்தில் நயன்தாராவுடன் இணைந்து  ’பாஸ்கர் த ராஸ்கல்’ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் முடிவுக்கு பிறகு ராம் படத்தில் நடிப்பார் என தெரிகிறது. 

இதேபோல் மலையாள முன்னணி நடிகர் திலீப்பும் ’கண்ணா லட்டு திங்க ஆசையா’ பட இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் ஒரு தமிழ் படத்தில் நடிக்க உள்ளார். இருவரும் சில வருடங்களுக்கு முன்புவரை தமிழில் நடித்தவர்கள்தான். இடையில் முழுமையாக மலையாள உலகில் கவனம் செலுத்தியவர்கள் இப்போது மீண்டும் தமிழுக்குள் வர இருக்கின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்