அஜித்,விஜய், அர்ஜுனைத் தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆர்! | டெம்பர், என்.டி.ஆர். சத்யராஜ், அஜித், அர்ஜூன், Jr.NTR, temper, Sathyaraj,

வெளியிடப்பட்ட நேரம்: 17:53 (02/03/2015)

கடைசி தொடர்பு:17:53 (02/03/2015)

அஜித்,விஜய், அர்ஜுனைத் தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆர்!

ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த படம் “டெம்பர்”. அதே வேகத்துடன் அடுத்தப் படத்திற்கான வேலையில் இறங்கி விட்டார் என்.டி.ஆர்.

சுகுமார் இயக்கத்தில் என்.டி.ஆர் அடுத்தப் படத்தில் நடிக்கவுள்ளார். அந்தப் படத்தில் என்.டி.ஆருக்கு நெகட்டிவ் கேரக்டராம். டெம்பர் படத்தில் நெகட்டிவ் கேரட்டரில் நடித்து திருந்தி நல்லவாரவது போன்ற வேடத்தில் நடித்தார். இந்தப் படத்தில் முழுக்க முழுக்க நெகட்டிவ் கதாபாத்திரமாம். 

படத்தின் தலைப்பு ரசிகர்களை ஈர்க்கவேண்டும் என்று டெம்பர் படத்தின் பிரபல வசனத்திலிருந்தே அடுத்த படத்திற்கான தலைப்பை தேர்வு செய்துள்ளனர்.

“தண்ட யாத்ரா” என்று படத்தின் தலைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 5ல் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. ராகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close