தமிழுக்கு இறக்குமதியாகும் அனுஷ்காவின் இரு பிரம்மாண்ட படங்கள்!

வரலாறு சார்ந்த இரண்டு படங்கள் தெலுங்கில் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் ராஜமெளலியின் “பாகுபலி” மற்றும் குணசேகர் இயக்கத்தில் “ருத்ரமாதேவி” இவ்விரு படங்களும் தான் தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் எதிர்பார்க்கப்படும் படங்கள். 

’நான் ஈ’, ’மஹதீரா’, ’மரியாதை ராமன்னா’ போன்ற வெற்றிப் படங்களின் இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்ட படமாக மே 15ல் வெளியாகவிருக்கிறது “பாகுபலி” மதன் கார்க்கியின் வசனத்தில் தமிழிலும் டப் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் இரு மொழிகளிலும் வெளியாகவிருக்கிறது.

அனுஷ்கா, ராணா, பிரபாஸ், தமன்னா, நாசர் மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வரலாற்று காவியமாக உருவாகிவருகிறது பாகுபலி. 175 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் கீரவாணி இசையமைக்க, கோட்டகிரி வெங்கடேஷ்வரராவ் எடிட்டிங்கில் படம் வெளியாக தயார் நிலையில் இருக்கிறது.

குனசேகர் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் இன்னொரு படம் ருத்ரமாதேவி. தமிழ் மற்றும் தெலுங்கி என்று இரு மொழிகளிலும் முதல் முறையாக 3டியில் வெளிவரும் வரலாற்றுத் திரைப்படம். அனுஷ்கா, அல்லு அர்ஜூன், ராணா, பிரகாஷ்ராஜ், நித்யாமேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ஏப்ரல் 24ல் வெளியாகவிருக்கும் இதன் தமிழ் பட வெளியீட்டு உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் பெற்றிருக்கிறது. 50கோடியில் உருவாகும் இப்படம் கதாநாயகியை மையப்படுத்தி இந்தியாவில் வெளியாகும் மெகா பட்ஜெட் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இளையராஜா இசையமைக்க, தோட்டா தரணி கலையில் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது “ருத்ரமாதேவி”.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!