ப்ரித்வி ராஜ் பிக்கெட்-43 படத்தின் இயக்குநரா? மேஜர் ரவி விளக்கம் | மேஜர் ரவி, பிக்கெட்43, ப்ரித்விராஜ், prithviraj, picket 43

வெளியிடப்பட்ட நேரம்: 16:14 (12/03/2015)

கடைசி தொடர்பு:16:42 (25/03/2015)

ப்ரித்வி ராஜ் பிக்கெட்-43 படத்தின் இயக்குநரா? மேஜர் ரவி விளக்கம்

ப்ரித்வி ராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் “பிக்கெட்-43”. ராணுவ படங்களை எடுக்கும் ஸ்பெஷலிஸ்ட் மேஜர் ரவி இப்படத்தை இயக்கினார். பட்ஜெட்டுக்கு மேல் 70 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவு செய்துள்ளதாக தயாரிப்பாளர் ஓ.ஜி.சுனில் மேஜர் ரவி மீது குற்றம் சாட்டிவந்தார்.

தற்பொழுது ஒரு பேட்டியில் ஓ.ஜி.சுனில் , “ பிக்கெட்-43 படத்தின் முதுகெழும்பாக இருந்து படத்தினை வெற்றிபெறச் செய்தது ப்ரித்வி ராஜ் மற்றும் படத்தின் ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி.ஜான் இருவரும் தான். படத்திற்கு கிடைத்த அனைத்து பாராட்டுகளும் இவர் இருவரையே சேரும். மேஜர் ரவி இப்படத்தில் ஒன்றும் செய்யவில்லை என்று அடுத்தடுத்த குற்றங்களை சுமத்தியிருக்கிறார் சுனில்.

மேஜர் ரவி பதிலுக்கு , “ நான் மலையாளத்தில் ஐந்து படங்களுக்கு மேல் எடுத்துள்ளேன். பின் எதற்கு இவர்களின் உதவி இயக்கத்துடன் நான் படம் எடுக்க வேண்டும். லாஜிக் இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார், இவரின் தவறான எண்ணம் மட்டுமே தெரிகிறது என்று மாற்று பதில் அளித்துள்ளார் மேஜர் ரவி.

ராணுவப் படங்களையே எடுத்துவரும் மேஜர் ரவி மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை நம்ப மறுத்து வருகிறார்கள் திரையுலக பிரமுகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்