பெங்களூர் டேஸ் தமிழ் ரீமேக் அப்டேட்! | பெங்களூர்டேஸ், ஆர்யா, துல்கர் சல்மான், பார்வதிமேனன், பாபிசிம்ஹா, பாஸ்கர், தமிழ் ரீமேக்

வெளியிடப்பட்ட நேரம்: 11:48 (19/03/2015)

கடைசி தொடர்பு:18:30 (26/03/2015)

பெங்களூர் டேஸ் தமிழ் ரீமேக் அப்டேட்!

மலையாளத்தில் ஹிட் அடித்த “பெங்களூர் டேஸ்” படத்தின் தமிழ் ரீமேக்கிற்கான பூஜை நடைபெற்றது. பெங்களூர்டேஸ் படத்தில் நடித்த பார்வதி மேனன் அதே வேடத்திலேயே தமிழிலும் நடிக்கவிருக்கிறார்.

மலையாளத்தில், துல்கர் சல்மான், நிவின்பவுளி, நஸ்ரியா நசீம் நடித்த முக்கியமான கதாப்பாத்திரத்தில் ஆர்யா, பாபிசிம்ஹா மற்றும் ஸ்ரீதிவ்யா நடிக்கவிருக்கிறார்கள். மேலும் பகத் ஃபாசில் பாத்திரத்தில் ராணா நடிக்கவிருக்கிறார்.

இதற்கிடையில் மலையாளத்தில் பார்வதி மேனன் நடித்த வேடத்தில் யார் நடிக்கவிருக்கிறார் என்பது தெரியாமலிருந்தது. தற்பொழுது மாற்றுத் திறனாளியாக வீல் சேரில் வந்து ரேடியோ ஆர்.ஜே.யாக, தன்னுடைய நடிப்பில் அப்லாஸ் அள்ளிய பார்வதி மேனன் அதே கதாப்பாத்திரத்திலேயே தமிழிலும் நடிக்கிறார். இவர் ஆர்யாவிற்கு ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் பாஸ்கர் இப்படத்தினை இயக்கவிருக்கிறார். இவர் தெலுங்கில் ’பொம்மரீலு’ படத்தினை இயக்கியவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்