நெட்டில் பரவும் மகேஷ் பாபுவின் பாடல் காட்சிகள்...அதிர்ச்சியில் படக்குழு...

“ஆகடு” படத்தினைத் தொடர்ந்து மகேஷ்பாபு நடித்துவரும் படம் “ஸ்ரீமந்துடு”. அடுத்தடுத்து படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மகேஷ்பாபு தனி அக்கறையுடன் நடித்துவரும் இந்தப் படத்தினை கொரடல சிவா இயக்குகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் ஒரு பாடலை யு டியூப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நெட்டில் பரவி வைரல் அடித்த இந்தப் பாடலை யார் பரப்பினார் என்பது தெரியவில்லை என்பதால் படக்குழுவே அதிர்ச்சியில் உள்ளது. இருப்பினும் மகேஷ்பாபு நடனம் மற்றும் சண்டைக் காட்சிகளில் மிகுந்த அக்கறையுடன் பணியாற்றிவருகிறார்.

அனல் அரசு சண்டைக்காட்சிகள் அமைப்பில் சில காட்சிகள்  தற்பொழுது படமாக்கப்பட்டுள்ளன. ’ஐ’ மற்றும் ’கத்தி’ போன்ற படங்களுக்கு சண்டைகாட்சிகள் அமைத்தவர் அனல் அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கவுள்ளார். மகேஷ்பாபுவின் தந்தையாக ஜெகபதி பாபு நடிக்கிறார். மற்றும் நதியா, பூர்ணா, சம்பத் ராஜ், பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!