வெளியிடப்பட்ட நேரம்: 18:32 (01/04/2015)

கடைசி தொடர்பு:18:45 (01/04/2015)

மீண்டும் மஞ்சுவாரியாரும் மோகன்லாலும்!

'என்னும் எப்போழும்' படத்தின் வெற்றிக்குப் பிறகு மோகன்லால் நடித்து வெளிவரவிருக்கும் படம் “லோகம். இப்படத்திலும் மஞ்சுவாரியார் நடிக்கவிருக்கிறார்.

ரஞ்சித் இயக்கத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். ஆக்‌ஷன் கலந்த க்ரைம் த்ரில்லர் படமாக தயாராகிக் கொண்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கோழிக்கூடு என்னும் இடத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கேரளாவிற்கு தங்கம் கடத்துவதே இப்படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களம் இறங்கியிருக்கும் மலையாள நடிகை மஞ்சுவாரியார் சிறப்பு தேற்றத்தில் இந்தப்படத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே மோகன்லாலுடன் “என்னும் எப்போழும்” படத்தில் இணைந்து நடித்தவர். ரீ எண்ட்ரியில் மோகன்லாலுடன் இரண்டாவது படம் 'லோகம்'.மேலும் இவர் நடித்த ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்தின் வெற்றி நாம் அறிந்ததே. அப்படமே தற்போது ‘36 வயதினிலே’ என்ற பெயரில் ஜோதிகா நடிப்பில் விரைவில் தமிழில் வெளியாக உள்ளது .

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்