’கத்தி’ தெலுங்கு ரீமேக்கில் ஜூனியர் என்.டி.ஆர்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா , சதீஷ் நடிப்பில் சென்ற வருட தீபாவளி சிறப்பாக வெளியான படம் ‘கத்தி’. படத்திற்கு இசை அனிருத். படத்தின் ரிலீஸில் ஏகப்பட்ட இடையூறுகள் உருவாகி பின் ஒருவழியாக வெளியாகி ஹிட்டும் அடித்தது.

விமர்சன ரீதியில் கலவையான கருத்துகள் நிலவினாலும் பாக்ஸ் ஆபிசில் படம் ஹிட்டானது. இதனையடுத்து படத்தை தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யும் எண்ணத்தில் உள்ளனர் தயாரிப்புக் குழு.

முன்னதாக மகேஷ் பாபு மற்றும் பவன் கல்யாண் இருவரிடமும் பேசப்பட்டது. பவன் கல்யாண நடிக்க மறுத்தார். அதே சமயம் மகேஷ் பாபு நான் ரீமேக் படங்களில் நடிப்பதில்லை என கூறினார். அதே போல் இந்தியில் சல்மான் கானிடம் பேசினார் முருகதாஸ் எனினும் அது குறித்து தகவல்கள் ஏதும் வெளியாக வில்லை.

தற்போது இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நல்லமல்லப்பு ஸ்ரீனிவாஸ் மற்றும் தாகூர் மது ஆகியோர் இணைந்து வாங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து இப்படத்தை இயக்கும் வாய்ப்பை தெலுங்கு முன்னணி இயக்குநரான கோபிசந்துக்கு வழங்கப்பட்டுள்ளது. விஜய் நடித்த பாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க இருக்கிறார். ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!