வெளியிடப்பட்ட நேரம்: 15:44 (13/04/2015)

கடைசி தொடர்பு:15:52 (13/04/2015)

பேட்டால் அடிவாங்கிய சார்மி! மருத்துவமனையில் அனுமதி

தெலுங்கின் முன்னனி நடிகையாக வலம் வரும் சார்மி. விஜய டி.ராஜேந்தர் இயக்கத்தில் சிம்பு மற்றும் சார்மி இருவரும் அறிமுகமான படம் “காதல் அழிவதில்லை”,

அதைத் தொடர்ந்து சார்மிக்கு தமிழில் அதிக படங்கள் இல்லை,  ஆயினும் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நட்சத்திர நடிகையாக இருப்பவர். சமீபத்தில் “ ஜோதி லட்சுமி” என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

படத்திற்கான சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அதில் சார்மியின் தலையில் அடிப்பது போன்ற காட்சியில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் சார்மியின் முகத்தில் தவறுதலாக ஹாக்கி பேட்டால் அடித்து விட மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்திருக்கிறது படக்குழு. சார்மிக்கு இரத்த காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டாராம்  சார்மி. தற்பொழுது தமிழில் விக்ரம் நடிக்கும்  “10 எண்றதுக்குள்ள”  படத்தில் சார்மி ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளார். விரைவில் படம் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்