வெளியிடப்பட்ட நேரம்: 17:07 (17/04/2015)

கடைசி தொடர்பு:17:07 (17/04/2015)

கன்னடத்திலும் கொலவெறி காட்டும் தனுஷ்

 கொலவெறி பாடல் மூலம் இந்திய பிரபலம் ஆனார் தனுஷ். ’புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ ,’தேவதையைக் கண்டேன்’, ’புதுபேட்டை’ உள்ளிட்ட படங்களில் ஒவ்வொரு பாடல்கள் மூலம் பாட ஆரம்பித்தவர் தனுஷ்.

பின் அனிருத் கூட்டணியில் கொலவெறி பாடல் மூலம் இந்தியா முழுக்க பிரபலம் ஆகி பாடலும் இதுவரை இல்லாத அளவிற்கு வைரலானது. மேலும் வைரல் என்ற வார்த்தை கூட இந்த பாடல் மூலம் தான் பெரும்பான்மையான மக்களிடம் சென்று சேர்ந்தது. 

பின் இவர்கள் கூட்டணியில் ‘வேலையில்லா பட்டதாரி’ படம் அடுத்த ஹிட்டானது. மேலும் நடிகர் , தயாரிப்பாளர் என்பதை காட்டிலும் பாடகர் தனுஷ் அதிகமாக பிரபலமானது குறிப்பிடத்தக்கது. இப்போது அடுத்த கட்டமாக தமிழ் தவிர்த்து மற்ர மொழிகளிலும் பாடல் பாட துவங்கியுள்ளார். 

கன்னடத்தில் ஷிவராஜ்குமார் இயக்கத்தில் ‘வஜ்ரகாயா’ படத்தில் ஒரு பாடல் பாட இருக்கிறார். மேலும் இந்த பாடல் ஒரு குத்து பாடலாக உருவாக உள்ளது. கலக்குங்க ! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்