துல்கரிடம் நடிப்பு கற்றுக்கொள்ள வேண்டும் மம்மூட்டி - ராம் கோபால் வர்மா புது சர்ச்சை | Mamooty should learn acting from his son..I mean realistic - RGV says

வெளியிடப்பட்ட நேரம்: 17:41 (22/04/2015)

கடைசி தொடர்பு:17:57 (22/04/2015)

துல்கரிடம் நடிப்பு கற்றுக்கொள்ள வேண்டும் மம்மூட்டி - ராம் கோபால் வர்மா புது சர்ச்சை

 ’ஓ காதல் கண்மணி’ படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஹாட் ஹீரோவாகியிருக்கிறார் துல்கர் சல்மான். மேலும் இளம் பெண்கள் பலருக்கும் துல்கரை பிடித்திருப்பதுதான் இப்போது கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாபிக். 

 இந்நிலையில் தெலுங்கின் சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா ’ஓ காதல் கண்மணி’ படத்தை பார்த்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் மம்மூட்டியுடன் துல்கரை ஒப்பிட்டு கருத்து தெரிவித்து தற்போது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறார். 

’ஓகே கண்மணி’ படம் பார்த்தேன். விருதுகள் கொடுக்கும் கமிட்டிகள் மம்மூட்டிக்கு அளித்த விருதுகள் அனைத்தையும் துல்கர் சல்மானுக்கு வாங்கி கொடுக்கவும்.துல்கருடன் ஒப்பிடுகையில் மம்மூட்டி வெறும் ஜூனியர் ஆர்டிஸ்ட் தான். 

மம்மூட்டி அவரது மகனிடம் நடிப்பு கற்றுகொள்ளவேண்டும். அதாவது ரியாலிட்டியை கற்றுகொள்ள வேண்டும். கேரளா அல்லாத மற்ற சினிமா மார்கெட்டில் சாதனை படைத்து கேரளா சினிமாவை பெருமையடையச் செய்துள்ளார். இதை மம்மூட்டி செய்யவில்லை என கூறியுள்ளார். இதனால் மம்மூட்டியின் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பையும், கோபத்தையும் உருவாக்கியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்