வெளியிடப்பட்ட நேரம்: 10:16 (23/04/2015)

கடைசி தொடர்பு:10:22 (23/04/2015)

மீண்டும் வெளியாகிறது ‘என்னை அறிந்தால்’

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அனுஷ்கா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிப்ரவரி 5ம் தேதி வெளியான படம் ‘என்னை அறிந்தால்’ . இந்த வருட துவக்கத்தில் வெளியான படங்களில் மெகா ஹிட்டான படம்.

ஏற்கனவே விஜய், சூர்யா ,விஷால் படங்கள் என தெலுங்கிற்கு டப்பாகி ஹிட்டடித்து வரும் நிலையில் தற்பொது அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படமும் வெளியாக உள்ளது. ஆக்‌ஷன் கதைக்களமான இப்படத்தில் பாடல்களும் சரி , ட்ரெய்லர்களும் சரி தினம் தினம் ஒரு வைரலை உருவாக்கியது. 

விரைவில் ‘என்னை அறிந்தால்’ படத்தின் தெலுங்கு வெர்ஷன் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே த்ரிஷா, அனுஷ்கா இருவரும் தெலுங்கில் தனக்கேன ஒரு தனி இடம் பிடித்திருப்பதால் இப்படத்திற்கு இன்னும் வரவேற்பு அதிகமாக இருக்கும் என்பதால் தற்போது டப்பிங் வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. விரைவில் தெலுங்கு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்