வெளியிடப்பட்ட நேரம்: 12:54 (28/04/2015)

கடைசி தொடர்பு:13:34 (28/04/2015)

”ஜூலையில் வந்துடுவோம், நம்பலாம்” பாகுபலி பற்றி இயக்குநர் ராஜமெளலி!

நான் ஈ, மகதீரா போன்ற வெற்றிப் படங்களைத் தந்தவர்  ராஜமௌலி. இவரின் அடுத்த பிரம்மாண்டமான படைப்பாக உருவாகி வருகிறது 'பாகுபலி'. ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் வெளியாகவிருக்கிறது.

தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் புது புது தொழில் நுட்பத்துடன் வித்தியாச கதைகளத்துடன் படத்தினை இயக்குபவர் ராஜமெளலி. இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படத்தினைப் பற்றி பேசியதாவது, “ பாகுபாலி படத்தினை மே மாதத்தில் வெளியிடுவதாக இருந்தோம். ஆனால் படத்தின் வேலைகள் திட்டமிட்டபடி முடிக்க முடியவில்லை. அதனால் பட வெளியீட்டை ஜூலை மாதத்திற்கு தள்ளி வைத்திருக்கிறோம்.

மே 31ம் தேதி கண்டிப்பாக படத்தின் டிரெய்லரை வெளியிடவுள்ளோம். இதை நீங்க நம்பலாம் (சிரித்தவாறு).  அதுமட்டுமில்லாமல் 17 ஸ்டுடியோக்களில் 600 கலைஞர்களுடன் வேலை படுவேகத்தில் நடந்துவருகிறது. உங்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் விரைவில் வெளியாகும் ’பாகுபலி’ என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லமல் மே 1ல் படத்தின் முக்கிய பாத்திரங்களில் நடித்தவர்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். பாகுபாலி இந்திய சினிமாவில் அடுத்தக் கட்டம். அனைத்து திரையுலகின் எதிர்பார்ப்பும் பாகுபாலி மேல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜமெளலி படத்தினைப் பற்றி பேசிய வீடியோ!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்