வெளியிடப்பட்ட நேரம்: 11:59 (02/05/2015)

கடைசி தொடர்பு:12:56 (02/05/2015)

பாகுபலி ரிலீஸ்... பின்வாங்கியதா மகேஷ்பாபுவின் ஸ்ரீமந்துடு?

ஆகடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மகேஷ் பாபு நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ஸ்ரீமந்துடு. கோடையில் வெளியாகவேண்டிய படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர் படக்குழுவினர்.

கோரடல சிவா இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் ஸ்ரீமந்துடு படம் மே 15ல் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். பின்னர் ஜூலை 3ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். பின்னர் ஜூலை 17ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. தற்பொழுது ஆகஸ்ட் 14ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. சுதந்திரத்தினத்திற்கு முந்தைய தினம் வெளியிட என்ன காரணம் என்று கேள்வி எழுந்துள்ளது.

ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் பாகுபலி. ஆரம்பத்தில் ஜூலை 3ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார் இயக்குநர். அதனால் ஸ்ரீமந்துடு ஜூலை 17க்கு தள்ளிவைக்கப்பட்டதாம். தற்பொழுது ராஜமெளலி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஜூலை 10ல் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

அதனால் ஸ்ரீமந்துடு ரிலீஸ் 17ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 14ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பாகுபலி படத்துடன் போட்டி போட்டாமல் பாதுகாப்பான வளையத்தினுள் படத்தினை வெளியிட திட்டமிட்டுள்ளதாம் படக்குழு. மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஜகபதிபாபு, சுகன்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்