வித்தியாசமான பாகுபலி போஸ்டர்! பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | baahubali Movie Poster Release!

வெளியிடப்பட்ட நேரம்: 17:02 (02/05/2015)

கடைசி தொடர்பு:18:10 (02/05/2015)

வித்தியாசமான பாகுபலி போஸ்டர்! பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் படைப்பு,  ராஜமெளலி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் பாகுபலி படம். இதற்கான போஸ்டர் நேற்று வெளியானது.

அனுஷ்கா, தமன்னா, பிரபாஸ், ராணா, சுதீப் உள்ளிட்ட பல நட்சத்திர கலைஞர்களின் நடிப்பில் நவீன தொழில் நுட்பத்தில் தயாராகிவருகிறது. குழந்தையை கையில் வைத்திருப்பது போல உருவாகியிருக்கும் போஸ்டரைக் கண்டு கற்பனையின் உச்சத்தினை கண்டு வியந்திருக்கிறது ரசிக பட்டாளம்.

படம் ஜூலை 10ம் தேதி வெளியாகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகிவரும் இப்படம் இந்தி, ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளுக்கு அதே நேரத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறது. தமிழில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வெளிவிடுகிறது.

பாகுபலி போஸ்டர்ஸ்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close