ரசிகர்களுக்காக மீண்டும் திரையில் காவ்யா மாதவன்! | kavya madhavan Come Back

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (02/05/2015)

கடைசி தொடர்பு:18:14 (02/05/2015)

ரசிகர்களுக்காக மீண்டும் திரையில் காவ்யா மாதவன்!

குழந்தை நட்சத்திரமாக தோன்றி பிரம்மாண்ட நடிகையாக மலையாள சினிமாவில் வலம் வந்த நடிகை காவ்யா மாதவன். மீண்டும் சினிமாவில் தன் பயணத்தை தொடர்கிறார்.

ஐந்து சுந்தரிகள் படத்திற்குப் பிறகு சினிமாவில் எந்தப் படமும் நடிக்கவில்லை. தற்பொழுது “ஷி டாக்‌ஸி” என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிப்பில் இறங்கியிருக்கிறார் காவ்யா மாதவன். 

சாஜி சுரேந்திரன் இயக்கத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் காவ்யா நடிக்க  நேற்று ஷி டாக்ஸி வெளியானது. இப்படத்தில் காவ்யா நடித்த கதாப்பாத்திரத்தின் பெயர் தேவயானி. டாக்ஸி ஓட்டுநராக நடித்திருக்கிறார். மற்றும் அனூப் மேனன் ஹீரோவாக நடித்திருக்கிறார். 

கேரளாவில் பெண்களுக்காக பெண்களே ஓட்டும் டாக்ஸியான ஷி டாக்ஸி என்ற கான்செப்டையே கதைக்களமாக கொண்டு படமாக எடுத்துள்ளனர். இந்த ஷி டாக்ஸி கேரளா மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கொண்டு வர திட்டம் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது. 

இதைத் தொடர்ந்து “ஆகாஷவானி” என்ற படத்திலும் நடித்துவருகிறார். அதுமட்டுமில்லாமல் கமலின் பாபநாசம் இயக்கிய ஜீத்து ஜோசப்பின் இயக்கத்திலும் அடுத்தடுத்து படம் நடிக்கவிருக்கிறார்.ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் மூலம் மஞ்சு வாரியார் ரிஎண்ட்ரி கொடுத்தது போல காவ்யா மாதவனையும் இனி திரையில் பார்க்கலாம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close