வெளியிடப்பட்ட நேரம்: 13:14 (07/05/2015)

கடைசி தொடர்பு:13:43 (07/05/2015)

பாலகிருஷ்ணாவுடன் போட்டிப் போட அஞ்சிய லட்சுமி மஞ்சு!

பிரபலதெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகளான லெட்சுமி மஞ்சு நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் தொங்காடா. இவருக்கு ஜோடியாக அதிவி செஷ் நடிக்கிறார். இப்படத்தை  மஞ்சு எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இது லட்சுமிமஞ்சுவின் சொந்த நிறுவனம்.

இந்தப்படம். கடந்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால், சென்ற வாரம் பாலகிருஷ்ணாவின் லயன் திரைப்படம் வெளியாகும் என்று இருந்ததால்,  இந்த வார வெள்ளிக்கிழமை வெளியாகிறது தொங்காடா. பெரிய பட்ஜெட் படங்களுடன் போட்டியிடாமல் பாதுகாப்புடனே வெளியிட எண்ணியிருக்கிறாராம் லட்சுமி மஞ்சு.

கடத்தல் சார்ந்த காமெடி க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியிக்கிறது தொங்காடா. ராணா சிறப்பு தோற்றத்தில் நடிக்க, பிரம்மானந்தா காமெடியனாக நடிக்கிறார். வம்சி கிருஷ்ணா இப்படத்தினை இயக்கியுள்ளார்.

ஓம் சாந்தி ஓம் படத்தின் மேல் உள்ள தாக்கத்தில் இப்படத்தில் நடித்துள்ளாராம் லட்சுமி. அதுமட்டுமில்லாமல் ஒரு பாடலுக்கு ஒன்பது ஹீரோக்களுடன் இணைந்தும் நடித்துள்ளாராம்.

லட்சுமிமஞ்சு. தமிழில் மணிரத்னத்தின் கடல் படத்தில் அர்ஜுனின் காதலியாக நடித்திருக்கிறார். தெலுங்கில் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்