அனுஷ்காவை புகழும் நித்யா மேனன்!

குணசேகரன் இயக்கத்தில் அனுஷ்கா, அல்லு அர்ஜுன், ராணா டகுபதி, நித்யா மேனன், கேத்ரீன் தெரசா உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் படம் ‘ருத்ரமாதேவி’. படத்திற்கு இசை இளையராஜா.

இந்த படத்தில் அனுஷ்கா, நித்யா மேனன், கேத்ரீன் தெரசா மூவருக்கும் ஒரு சிறப்பு பாடல் உள்ளது. அரண்மனையில் நான்கு தோழிகள் ஆடிப்பாடி மகிழ்வது போன்ற அந்த பாடலில், நித்யா மேனன் உயரம் குறைவு என்பதால் அவருக்காக அனுஷ்கா சற்றே குனிந்து நடித்துள்ளாராம். இதனால் நித்யா மெனன் அனுஷ்காவை எங்கு எந்த பேட்டியாயினும் புகழத் துவங்கியுள்ளார்.

நான் என் வாழ்வில் சந்தித்த மிகச்சிறந்த நபர்களில் அனுஷ்காவும் ஒருவர். எனக்கும் அவருக்கும் பல விஷயங்களில் ஒத்துக் போகின்றன. என நித்யா மேனன் அனுஷ்காவை பாராட்டி வருகிறார். இந்த படம் ஜுன் மாதம் திரைக்கு வரவுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!