உறுதியானது சிரஞ்சீவியின் 150வது படம்....டிவிட்டரில் ட்ரெண்டாக்கி ரசிகர்கள் கொண்டாட்டம்!

தெலுங்கு சினிமாவின் மேகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு வெறித்தனமாக ரசிகர்கள் இருப்பது நாம் அறிந்ததே. அவர் எப்போது அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தாரோ அப்போதே சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். 

இவரைத் தொடர்ந்து அவரது மகன் ராம் சரண் பல படங்களில் நடித்ததோடு முன்னணி நடிகராகவும் மாறிவிட்டார். இந்நிலையில் சிரஞ்சீவியின் 150வது படம் எப்போது , யார் இயக்குநர் என்ற கேள்விக்கு மட்டும் விடை தெரியாமலேயே இருந்துவந்தது. 

தற்போது அது உறுதியாகியுள்ளது.’ தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரான பூரி ஜகநாதன் தான் அப்படத்தை இயக்க உள்ளார். இது குறித்து ராம் சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ’கடைசியாக அப்பாவின் 150வது படம் உறுதியாகிவிட்டது. பூரி ஜகநாதன் படத்தை இயக்குகிறார். உற்சாகமாக உள்ளது’. என ட்வீட் செய்துள்ளார். 

இதனையடுத்து #Chiru150 என ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் இந்த படம் முழுமையான காமெடி படமாக இருக்கும் எனவும், ஏற்கனவே ஜகநாதன் ‘ஆட்டோ ஜானி’ என்ற பெயரை பதிவு செய்து வைத்துள்ளதால் அது இந்த படத்தின் பெயராக இருக்கலாம் எனவும் தெலுங்கில் வெளியாகும் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!