வெளியிடப்பட்ட நேரம்: 19:11 (12/05/2015)

கடைசி தொடர்பு:19:11 (12/05/2015)

ஒரு வழியாக வெளியாகப்போகிறது லைலா ஓ லைலா!

மலையாளத்தின் மூத்த இயக்குநர் ஜோஷி இயக்கத்தில் மோகன்லால் மற்றும் அமலா பால் நடிப்பில் ஒரு வருடத்திற்கு மேலாக படப்பிடிப்பில் இருந்த படமே லைலா ஓ லைலா. நீண்ட நாட்கள் கிடப்பில் கிடந்த லைலா ஓ லைலா படம் மே 14ல் வெளியாகவிருக்கிறது.

இப்படத்தை நவம்பர் 2013ல் அறிவித்தனர். பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பும் வேலைகளிலும் படத்தினை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்பட்டதாம். பின்னர் 2014 டிசம்பர் 26ல் வெளியாகும் என்று அறிவித்து பின்னர் பட வெளியீடு தள்ளிச் சென்றது. இறுதியில் மே14ல் வெளியாகிறது லைலா ஓ லைலா.

சத்யராஜ் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அமலா பாலின் சகோதரனான அப்ஹிஜித் பால் அறிமுகமாகும் படமும் இதுவே. ரம்யா நெம்பீசன் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். பாலிவுட்டின் திரைகதையாசிரியர் சுரேஷ் நாயரின் கதையையே ஜோஷி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.

மோகன்லால், அமலாபால் மற்றும் ஜோஷி கூட்டணியில் உருவான ரன் பேபி ரன் படத்திற்குப் பிறகு இந்தப்படம் வெளியாவதால்  எதிர்பார்ப்பும் கூடியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்