மஞ்சுவாரியர், ஜோதிகாவைத் தொடர்ந்து பிரியங்கா! | manju warrier, Jothika Now Priyanka

வெளியிடப்பட்ட நேரம்: 15:59 (19/05/2015)

கடைசி தொடர்பு:16:01 (19/05/2015)

மஞ்சுவாரியர், ஜோதிகாவைத் தொடர்ந்து பிரியங்கா!

அஜித்துடன் ராஜா, விக்ரமுடன் காதல் சடுகுடு, விஜயகாந்துடன் ராஜ்யம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரியங்கா திரிவேதி. பிரபல கன்னட நடிகர் உபேந்திராவை திருமணம் செய்துகொண்டார்.  அதன் பின் சினிமாவிற்கே முழுக்கு போட்ட பிரியங்கா மீண்டும் கன்னட மொழி திரைப்படத்தில் நடிக்கிறார்.

கன்னடத்தின் பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான தினேஷ்பாபு இயக்கும் படத்தில் பிரியங்கா நடிக்கிறார். கதாநாயகியை மையப்படுத்திய கதாப்பாத்திரம் என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டாராம். அதுமட்டுமில்லாமல் படத்தின் பெயரும் பிரியங்கா தான்.

மேலும் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். படப்பிடிப்பு முடியும் நிலையில் இருக்கிறதாம். விரைவில் திரையில் எதிர்பார்க்கப்படுகிறது.

மலையாளத்தில் ஹவ் ஓல்ட் ஆர்யூ படத்தின் மூலம் மஞ்சுவாரியரும், தமிழில் 36 வயதினிலே படத்தின் மூலம் ஜோதிகாவும் ரி எண்டிரி கொடுத்தது போல கன்னடத்தில் உபேந்திராவின் உதவியுடன் களம் இறங்குகிறார் பிரியங்கா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close