என்.எஃப்.டி.சி. தலைவரானார் சுரேஷ் கோபி!

ஷங்கர் இயக்கத்தில் வெளியான “ஐ” படத்தில் டாக்டர் வாசுதேவனாக வில்லன் கதாபாத்திரத்தில் நம்மை மிரட்டியவர் சுரேஷ் கோபி. மலையாளத்தின் பிரபல நடிகரான இவர் தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத்தின் (NFDC) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் தகவல் துறை அமைச்சர் ராஜ்ய வர்தன் இணைந்து ஆலோசித்து முடிவெடுத்துள்ளனர். கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத்தின் சேர்மேன் இவரே. முன்னரே சுரேஷ் கோபியிடம் மத்திய அரசு விருப்பம் கேட்க, இவர் சம்மதம் தெரிவிக்கவே தற்பொழுது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

லோக் சபா தேர்தலுக்குப் பிறகு பிரதமருடன் நெருக்கமாக நட்புறவு கொண்டதும், பாஜகவில் உறுப்பினரானதும் பின்னர் சமுக ஆர்வலராக செயல்பட்டதுமே இவர் சேர்மன் ஆனதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

வெளிநாட்டுப் படங்களை இந்தியாவில் வெளியிட அனுமதி தருவது மற்றும் வெளிநாடுகளுக்கு இந்தியப் படங்களை அனுப்புவது முதலானவை இந்திய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் முக்கியப் பணிகள்.  தற்பொழுது இயக்குநர் ரமேஷ் ஷிப்பி NDFC சேர்மேனாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!