3 கோடி சம்பளம்... அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா? | Nayanthara Asked 3C ?

வெளியிடப்பட்ட நேரம்: 11:31 (22/05/2015)

கடைசி தொடர்பு:11:43 (22/05/2015)

3 கோடி சம்பளம்... அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா?

தெலுங்கு சினிமாவின் மேகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு தீவிர ரசிகர்கள் இருப்பது நாம் அறிந்ததே. அவர் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தது முதல் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

இவரைத் தொடர்ந்து அவரது மகன் ராம் சரண் பல படங்களில் நடித்ததோடு முன்னணி நடிகராகவும் மாறிவிட்டார். இந்நிலையில் சிரஞ்சீவியின் 150வது படம் எப்போது , யார் இயக்குநர் என்ற கேள்விக்கு மட்டும் விடை தெரியாமலேயே இருந்துவந்தது.

பின்னர் ஒருவழியாக தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரான பூரி ஜகநாதன் தான் அப்படத்தை இயக்க உள்ளார் எனவும் ஹீரோயினாக நடிக்க நயன்தாராவிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

ஆனால் அவர் 3 கோடி சம்பளம் கேட்கவே படக்குழு அதிர்ச்சியாகி தெலுங்கில் முன்னணியான நாயகிகளே அவ்வளவு கேட்பதில்லை இவருக்கு மூன்று கோடி கொடுப்பதற்கு பதில் இரண்டு டாப் ஹீரோயின்களை படத்தில் புக் பண்ணிவிடலாம் என படக்குழு நயன்தாரா வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நயன்தாரா இல்லாமல் வேறு இரு நடிகைகள் இப்படத்தில் நடிக்கலாம் என தகவல்கள் கசிந்துள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close