பாகுபலி இசை தள்ளிப்போனதற்கான உண்மையான காரணம்? | baahubali Music and Trailer PostPand ?

வெளியிடப்பட்ட நேரம்: 11:02 (29/05/2015)

கடைசி தொடர்பு:16:09 (29/05/2015)

பாகுபலி இசை தள்ளிப்போனதற்கான உண்மையான காரணம்?

தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் பாகுபலி. இப்படத்திற்கான இசை மற்றும் டிரெய்லர் மே31ம் தேதி நடைபெறவிருந்தது. தற்பொழுது தள்ளிவைக்கப்பட்டுள்ளதற்காக இயக்குநர் ராஜமெளலி மன்னிப்பு கேட்டது மட்டுமில்லாது அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

“நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த பாகுபலி படத்தின் இசை மற்றும் டிரெய்லரை வரும் 31ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தோம். அதற்காக முன்னரே செய்தியாளரை சந்தித்து நிகழ்ச்சி சார்ந்த நிகழ்வுகளை தெரிவிக்க இருந்தோம். ஆனால் சில பாதுகாப்பு பிரச்னைகளால் நிகழ்ச்சியை தள்ளிவைத்திருக்கிறோம். ஆரம்பத்தில் முறையான போலீஸ் பாதுகாப்பு, ரசிகள்கள் எப்படி உள்ளே வரவேண்டும், எந்த வழியாக செல்லவேண்டும், எங்கு பார்க்கிங் என்று அனைத்தையும் திட்டமிட்டிருந்தோம். ஆனால் தற்பொழுது ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எண்ணுகிறோம்.

இந்த விஷயத்தை காவல் துறை அதிகாரிகளிடம் சொன்னதற்கு, ஹைடெக்ஸ் மைதானத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கான அவர்கள் கவலையை தெரிவித்தனர். இதே போல பிறவிழாக்களில் பல்வேறு பிரச்னைகள் நடைபெற்றதால் பாதுகாப்பு குறித்து அச்சத்துடன் எங்களிடம் தெரிவித்தனர். அதாவது விழாவில் கலந்து கொள்ளும் ரசிகர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்த வரம்புக்குள் இருக்குமானால் நிகழ்ச்சியை நடத்துங்கள் என்று போலீஸார் கூறுகின்றனர் ஆனால் எங்கள் குழுவினர் இதற்கு சம்மதிக்கவில்லை.

எங்களுக்கு என்றும் ஆதரவு தரும் ரசிகர்களை விட்டுவிட்டு இந்த நிகழ்சியை கொண்டாடுவதில் எங்களுக்கு துளி கூட விருப்பமில்லை. சில ரசிகர்களை இழந்துதான் இந்த நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்றால் ரசிகர்களை விட நிகழ்ச்சி எங்களுக்கு முக்கியமில்லை.

எனவே இப்படிப்பட்ட பிரச்னைகளுக்கு நாங்கள் தீர்வு கண்டுவிட்டு இசைவெளியீட்டுக்கான மாற்றுத்தேதியை விரைவில் வெளியிடுவோம். தற்பொழுது செய்தியாளர்களை அழைத்ததே விழா தள்ளிப் போனதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்ளத்தான். அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் இன்னும் சில நாட்கள் பொருத்துக்கொள்ளவும் வேண்டுகிறோம். அனைத்து ரசிகர்களையும் இந்த நிகழ்ச்சியில் எப்படி பங்குகொள்ள வைப்பது என்பதற்காக தீர்வுகளை யோசித்துவருகிறோம், விரைவில் ரசிகர்களை விழாவில் காண்போம்” என்று ராஜமொளலி கூறியுள்ளார்.

ராஜமெளலி இவ்வாறு கூறியிருந்தாலும் நிகழ்ச்சி தள்ளிப்போனதற்கு காவல்துறை முறையான அனுமதி வழங்காததே காரணம் என்று சொல்லப்படுகிறது.

செய்தியை ஆடியோ வடிவில் கேட்க:  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close