வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (06/06/2015)

கடைசி தொடர்பு:13:15 (06/06/2015)

சர்ச்சையை உருவாக்கியுள்ள சார்மி படத்தின் இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ்!

 தெலுங்கில் சார்மி நடிப்பில் வெளியாக உள்ள படம் ஜோதி லட்சுமி. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடத்தப்பட்டது. படத்தின் புகைப்படங்களே படு மோசமான காட்சிகளுடன் பல் இளிக்க  தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது இசை வெளியீட்டு விழாவின் அழைப்பிதழ். 

அழைப்பிதழ் ஒரு பெண்ணின் முதுகுப்புறம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் அழைப்பிதழை பிரித்து பார்க்க வேண்டுமெனில் ஜாக்கெட்டின் பின்புறம் அவிழ்ப்பதைப் போல் பிரிக்க வேண்டும். அழைப்பிதழை தெலுங்கு சினிமாவின் பல பெரும் புள்ளிகளுக்கு கொடுக்க பலரும் இசை வெளியீட்டை தவிர்த்துள்ளனர். 

இது சார்மிக்கு சற்றே சங்கடமான சூழலை உருவாக்கியுள்ளது. மேலும் படம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் அதற்காக இப்படியா அழைப்பிதழ் என தெலுங்கு சினிமா பல்லை நரநரக்கத் துவங்கியுள்ளது. ஏற்கனவே சார்மியின் ஃபோட்டோ ஷூட் ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது தற்போது இது வேறு இணைந்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்