பாகுபலி படத்தின் பாடல்கள் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டதா?

மிக பிரம்மாண்டமாகத் தயாராகிவரும் படம் பாகுபலி. ராஜமெளலி இயக்கத்தில் அனுஷ்கா, தமன்னா, ராணா, பிரபாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் திரைக்கு வரத் தயாராகிவிட்டது.  சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர்   நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டு,  1கோடிக்கும் மேல் ரசிகர்கள் பார்த்து ஹிட் அடித்திருக்கிறது. 

ஆரம்பத்தில் பாகுபலி படத்திற்கான இசைவெளியீட்டு விழா மே 31ம் தேதி என அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிப்போனது. தற்பொழுது பாகுபலி பட தெலுங்கு இசைவெளியீடு ஜூன் 13ம் தேதி திருப்பதியில் பிரம்மாண்டமாக  நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் பாகுபலி படத்தின் கதைகள் லீக்கானதாக சொல்லப்பட்டது. தற்பொழுது பாகுபலி பட இசை இணையத்தில் வெளியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சமுக வலைதளம் மற்றும் வாட்ஸ் ஆப்களில் திருட்டுத்தனமாக சில பாடல்கள்  லீக் ஆவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆனால் அவ்வாறு நடைபெறுவதற்கு எந்தவித சாத்தியக்கூறும் இல்லை என்று சொல்லப்படுகிறது. என்னவாக இருந்தாலும் ஜூன் 13ல் இசை வெளியாவது உறுதி. தொடர்ந்து ஜூலை 10ம் தேதி பாகுபலி முதல் பாகம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகிறது. அடுத்த வருடம்  பாகுபலி பார்ட் 2 வெளியாகும்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!